இந்திய வானிலை ஆய்வு மைய தலைவராக விஞ்ஞானி மொகபத்ரா நியமனம்


இந்திய வானிலை ஆய்வு மைய தலைவராக விஞ்ஞானி மொகபத்ரா நியமனம்
x
தினத்தந்தி 4 Jun 2019 7:06 PM IST (Updated: 4 Jun 2019 7:06 PM IST)
t-max-icont-min-icon

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக பிரபல விஞ்ஞானி மிருத்யுன்ஜெய் மொகபத்ரா இன்று நியமிக்கப்பட்டார்.

புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக இருந்து வந்தவர் மிருத்யுன்ஜெய் மொகபத்ரா.  இவர் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டார்.  இதனை தொடர்ந்து வருகிற 2019ம் ஆண்டு ஆகஸ்டு 1ந்தேதி அல்லது அதற்கு பின்பு இதற்கான பொறுப்பினை ஏற்று கொள்கிறார்.

நாட்டில் ஏற்படும் வானிலை மற்றும் பருவகால மாற்றங்கள் பற்றிய முன்னறிவிப்பினை இந்த மையம் வெளியிடும்.  கடுமையான பருவகால நிகழ்வுகளான சூறாவளிகள், புழுதி புயல்கள், கனமழை மற்றும் பனி, குளிர் மற்றும் வெப்ப அலைகள் உள்ளிட்ட பிற விசயங்களை பற்றி இந்த மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story