மாயமான விமானத்தில் பயணம் செய்த ஒரு வீரர் அடையாளம் காணப்பட்டார்


மாயமான விமானத்தில் பயணம் செய்த ஒரு வீரர் அடையாளம் காணப்பட்டார்
x
தினத்தந்தி 5 Jun 2019 6:28 AM IST (Updated: 5 Jun 2019 6:28 AM IST)
t-max-icont-min-icon

மாயமான விமானத்தில் பயணித்தவர்களில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீரர் ஒருவரின் அடையாளம் தெரிந்தது.

பாட்டியாலா, 

அசாமில் இருந்து புறப்பட்டு மாயமான ஏஎன்–32 விமானப்படை விமானத்தில் பயணித்த 13 பேரும் யார் என்பது வெளியிடப்படாமல் இருந்தது. அவர்களில் ஒருவர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த லெப்டினன்ட் மோகித் கார்க் (வயது 27) என்பது தெரியவந்துள்ளது. விமானம் மாயமான தகவல் அறிந்ததும் மோகித்தின் தந்தை சுரிந்தர் கார்க் அசாமுக்கு விரைந்துள்ளார்.

மோகித்தின் சகோதரர் அஷ்வனி கார்க் கூறும்போது, அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குடும்பத்தினர் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். மோகித்துக்கு ஒரு வருடம் முன்பு தான் திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி அசாமில் ஒரு வங்கியில் பணிபுரிகிறார்.

Next Story