கர்நாடக அணைகளில் காவிரி உயர்மட்ட குழுவினர் 2-வது நாளாக ஆய்வு
கர்நாடக அணைகளில் காவிரி உயர்மட்ட குழுவினர் 2-வது நாளாக ஆய்வு நடத்தினர்.
மைசூரு,
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் (மே) 28-ந்தேதி உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இல்லாததால் தண்ணீர் திறப்பில் சிக்க இருப்பதாக கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை ஆணைய உயர்மட்டக் குழுவினர் நேற்றுமுன்தினம் ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து இந்த குழுவினர் நேற்று 2-வது நாளாக காவிரி படுகையில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் தற்போதைய நீர் இருப்பு, வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு, நீர்வரத்து ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த குழுவினர் 3-வது நாளாக இன்று (வியாழக் கிழமை) கபினி அணையில் ஆய்வு நடத்த இருப்பதாகவும், பின்னர் தமிழகம், கேரளாவில் உள்ள அணைகளில் நீர் இருப்பு, நீர் வெளியேற்றம், நீர் வரத்து குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story