கேரள மருத்துவமனைகளில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டுகள் திறப்பு
கேரள மருத்துவமனைகளில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நோய் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொச்சி,
வவ்வால்கள் மூலம் பரவுவதாக கருதப்படும் நிபா வைரஸ், கடந்த ஆண்டு கேரளாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தாக்கியவர்கள் கடுமையான காய்ச்சல், தலைவலி, தசைவலி, வாந்தி, தொண்டை வலி போன்ற பிரச்சினைகளால் கோமா நிலைக்கு சென்று, இறுதியில் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.
கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் 17 பேரை பலி வாங்கிய இந்த வைரஸ், இந்த ஆண்டும் கேரளாவில் தலைகாட்டி இருக் கிறது. அதன்படி எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இந்த நோய் அறிகுறிகளுடன் கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கேரளாவில் உள்ள ஆய்வுக்கூடங்களிலும், புனேயில் உள்ள தேசிய தொற்றுநோய் ஆய்வுக்கூடத்திலும் அவரது ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில், அவரை நிபா வைரஸ் தாக்கியிருப்பது உறுதியானது. எனவே அவரையும், இந்த நோய் அறிகுறியுள்ள மேலும் 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த 5 பேரின் ரத்த மாதிரியும் தற்போது புனேயில் உள்ள தேசிய தொற்றுநோய் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாக மாநில சுகாதார மந்திரி சைலஜா கூறியுள்ளார். மேலும் அவர்கள் அனைவரின் உடல் நிலையும் தற்போது திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வைரஸ் தாக்கியுள்ளதாக கூறப்படும் மேற்படி 6 பேருடன் நெருங்கி பழகியவர்கள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் நேற்று வரை 311 பேர் இந்த கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் அதிகரிக்கும் என அஞ்சப்படும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் தனி வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக எர்ணாகுளம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு மாவட்டங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது நிபா வைரஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும் நபர்களும் இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல நிபா வைரஸ் பரவுதலை தடுக்கும் ஆஸ்திரேலிய மருந்துகளும் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல்நிலையை பொறுத்து இந்த மருந்துகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று மந்திரி சைலஜா கூறினார்.
இதற்கிடையே நிபா வைரஸ் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும், இது தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்பக்கூடாது எனவும் மாநில அரசு அறிவுறுத்தி இருந்தது. எனினும் இதையும் மீறி சமூக வலைத்தளங்களில் இந்த நோய் தொடர்பாக வதந்தி பரப்பிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில் நிபா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பாக விவாதிப்பதற்காக முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறியுள்ள அவர், இது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழு கொச்சிக்கு வந்திருப்பதாகவும் கூறினார்.
நிபா வைரசை கட்டுப்படுத்துவதில் கடந்த ஆண்டு வெற்றி பெற்றது போல, இந்த ஆண்டும் இந்த வைரஸ் தாக்கத்தை ஒன்றுசேர்ந்து கட்டுப்படுத்துவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Tags :
Next Story