பிரதமர் மோடி - இம்ரான் கான் இடையே சந்திப்பு கிடையாது : மத்திய அரசு
பிரதமர் மோடி மற்றும் இம்ரான் கான் இடையே சந்திப்பு கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிசக்கெக் நகரில் நடைபெறும் செங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையில் இருதரப்பு சந்திப்பு எதுவும் கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என பாகிஸ்தானை கடந்த சில ஆண்டுகளாக இந்தியா புறந்தள்ளியுள்ளது. பாகிஸ்தான் விடுக்கும் கோரிக்கைகளையும் நிராகரித்தது. இப்போது செங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் சந்திப்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story