10% இடஒதுக்கீடு; முறையாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம்


10% இடஒதுக்கீடு; முறையாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம்
x
தினத்தந்தி 7 Jun 2019 8:08 AM (Updated: 7 Jun 2019 8:08 AM)
t-max-icont-min-icon

10% இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேறியது.

இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும். அதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவ படிப்பிற்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறவுள்ள நிலையில், 10% இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.

Next Story