காவிரி நீர் திறப்பதை தாமதிக்க கூடாது - ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்


காவிரி நீர் திறப்பதை தாமதிக்க கூடாது - ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jun 2019 12:39 AM IST (Updated: 8 Jun 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர் திறப்பதை தாமதிக்க கூடாது என ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றபோது, குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை என்ற காரணத்தை கூறி தண்ணீர் திறப்பதை கர்நாடக அரசு தாமதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக அதிகாரிகள் உள்பட 4 மாநில அரசு அதிகாரிகளும் தங்களது மாநில அணைகளின் நீர் இருப்பு மற்றும் மழைப்பதிவு விவரங்களை சமர்ப்பித்தனர். அப்போது ஆணைய உத்தரவுப்படி தமிழகத்துக்கு ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை மேலும் தாமதப்படுத்தாமல் உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மத்திய நீர்வள ஆணையம் தரப்பில், ஜூன் மாதத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் 0.76 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Next Story