சமூக வலைத்தள ஆர்வலர்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி பாராட்டு


சமூக வலைத்தள ஆர்வலர்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி பாராட்டு
x
தினத்தந்தி 8 Jun 2019 2:12 AM IST (Updated: 8 Jun 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தள ஆர்வலர்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி பாராட்டுக்களை தெரிவித்தார்.

விஜயவாடா,

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இரண்டு தேர்தல்களிலுமே ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இந்தநிலையில் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்ததாக சமூக வலைத்தள ஆர்வலர்களை மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பாராட்டியுள்ளார்.

‘எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு எதிராக சமூக வலைத்தள ஆர்வலர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்து இருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்’ என்று கூறி உள்ளார்.

Next Story