பிரதமர் மோடி தலைமையில் 12-ம் தேதி அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான முழு அமைச்சரவை கூட்டம், வருகிற 12-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
புதுடெல்லி
வரும் 17ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான முழு அமைச்சரவை கூட்டம், வருகிற 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
இதில் அடுத்த 5 ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து, அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி விளக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்மையில், நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்தும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்தும், மோடி எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story