ஒழுங்கின்மை அதிகரிப்பு சரியான நபரிடம் காங்கிரஸை ஒப்படைக்க வேண்டும் -வீரப்பமொய்லி!


ஒழுங்கின்மை அதிகரிப்பு சரியான நபரிடம் காங்கிரஸை ஒப்படைக்க வேண்டும்  -வீரப்பமொய்லி!
x
தினத்தந்தி 8 Jun 2019 9:33 AM GMT (Updated: 8 Jun 2019 9:33 AM GMT)

மாநில காங்கிரஸ் கட்சிக்குள் ஒழுங்கின்மை அதிகரிப்பு சரியான நபரிடம் காங்கிரஸை ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி கேட்டு கொண்டு உள்ளார்.

புதுடெல்லி

காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது;-

பல மாநிலங்களில் கட்சிக்குள் எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கின்றன. ஒழுங்கின்மை அதிகரித்து வருகிறது. தற்போது வரை ராகுல் தலைவராக நீடித்து வருகிறார். ராஜினாமா செய்திருப்பதாக சொல்லப்பட்ட போதும், தற்போதுவரை நீடிக்கும் அவர், ஒழுங்கின்மையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

ஒருவேளை அவர் தனது தலைவர் பதவியிலிருந்து உறுதியாக விலகும் பட்சத்தில், கட்சியை மறுசீரமைப்பு செய்துவிட்டு செல்ல வேண்டும். ஏன் என்றால் அவர் ஒரு உறுதியான தலைவர். அவ்வாறு தலைவர் பதவியை மாற்றித்தரும் பட்சத்தில் நேர்மையான, சரியான நபரிடம் கட்சியின் தலைமையை ஒப்படைக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பிரபல ஹாக்கி வீரரும், அரசியல் தலைவருமான அஸ்லம் ஷெர் கான், ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் "மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாகவும், அந்த பொறுப்புக்கு காந்தி குடும்பத்தை சாராத ஒருவரை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் தேவை. காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை அளிக்க யாராவது ஒருவர் முன்னோக்கி வரவேண்டும் என நான் நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ஒரு கடிதத்தை எழுதினேன். நீங்கள் (ராகுல் காந்தி) கட்சித் தலைவராக இருக்க விரும்பினால், அதை தொடரலாம். ஆனால் வேறு யாராவது அதற்கு பொருத்தமானவர் என்று நீங்கள் (ராகுல் காந்தி) நினைத்தால், அதை வரவேற்கிறேன். 

நேரு குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் யாருக்காவது காங்கிரஸ் தலைவர் பொறுப்பை கொடுக்க விரும்பினால், அதை எனக்குக் கொடுங்கள். இரண்டு வருடங்களுக்கு எனக்கு இந்த பொறுப்பைக் கொடுங்கள். மீண்டும் ஒருமுறை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த விரும்புகிறேன்" என அஸ்லம் ஷெர் கான் குறிப்பிட்டு இருந்தார்.

Next Story