பிரதமர் மோடி நாடு முழுவதும் விஷத்தை பரப்புகிறார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பரப்புரை, பொய்களாலும், விஷமாகவும், வெறுப்புணர்வாலும் நிரம்பியிருந்ததாகவும் அவற்றை பரப்பும் வகையில் இருந்ததாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
வயநாடு
பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் செய்வதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கேரளாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தன்னை தேர்ந்தெடுத்த வயநாடு தொகுதி மக்களுக்கு, கொட்டும் மழைக்கு இடையே பயணித்து, நன்றி தெரிவித்து வருகிறார்.
இரண்டாவது நாளாக இன்று, வயநாடு மாவட்டம் கல்பெட்டா என்ற இடத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலின்போது, பிரதமர் மோடியின் பிரச்சாரம், பொய்களாலும், விஷம் போல் தீங்கு விளைவிப்பதாகவும், வெறுப்புணர்வை தூண்டும்விதமாகவும் இருந்தது. காங்கிரசின் பரப்புரை, உண்மையையும், அன்பையும், பாசத்தையும், பரப்புவதாக அமைந்திருந்தது .
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், நாட்டில் விஷத்தை பரப்புபவர்களுடனும், தேசத்தை பிளவுபடுத்த நினைப்பவர்களுடனும் கடுமையாக மோதியதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
Related Tags :
Next Story