சாலையோர டீ கடையில் பஜ்ஜி சாப்பிட்ட ராகுல் காந்தி...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் சாலையோர டீ கடையில் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டு விட்டு சென்றார்.
திருவனந்தபுரம்,
பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் செய்ததால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கேரளாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தன்னை தேர்ந்தெடுத்த வயநாடு தொகுதி மக்களுக்கு, கொட்டும் மழைக்கு இடையே பயணித்து, நன்றி தெரிவித்து வருகிறார்.
இரண்டாவது நாளாக இன்று, வயநாடு மாவட்டம் கல்பெட்டா என்ற இடத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், வயநாட்டில் சாலையோரம் உள்ள டீ கடைக்குள் திடீரென நுழைந்த ராகுல் காந்தி, கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து பஜ்ஜி, வடை, பலகாரங்களை சாப்பிட்டு மகிழ்ந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாலையோர டீ கடையில் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டு விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.
Related Tags :
Next Story