ஒரு வாரம் தாமதம்: கேரளாவில் பருவ மழை தொடங்கியது


ஒரு வாரம் தாமதம்: கேரளாவில் பருவ மழை தொடங்கியது
x
தினத்தந்தி 8 Jun 2019 6:45 PM GMT (Updated: 8 Jun 2019 5:17 PM GMT)

ஒரு வாரம் தாமதமான நிலையில், கேரளாவில் பருவ மழை நேற்று தொடங்கியது.

புதுடெல்லி,

கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். இந்த ஆண்டு பருவமழை ஒரு வார காலம் தாமதம் ஆனது. இந்த நிலையில் அங்கு நேற்று பருவமழை தொடங்கியது. இதை இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கேரளாவில் பரவலாக பல இடங்களிலும் நல்ல மழை பெய்யத்தொடங்கி உள்ளது. நமது நாட்டில் பெரும்பாலான கிராமப்புற பகுதிகள் இந்த 4 மாத கால தென்மேற்கு பருவ மழையைத்தான் சார்ந்து உள்ளன. ஏனெனில் ஆண்டின் மொத்த மழையில் இந்தப் பருவமழை 75 சதவீதம் பங்களிப்பு செய்கிறது.

பருவமழை நன்றாகப் பெய்கிறபோது, அது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம்தான் முக்கிய பங்களிப்பு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story