கோவா விமானநிலைய ஓடுபாதையில் தீ
கோவா விமானநிலைய ஓடுபாதையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.
பனாஜி,
கோவா மாநிலம் தபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடற்படையின் மிக்-29கே போர் விமானம் ஒன்று நேற்று மதியம் 1 மணிக்கு புறப்பட முயன்றது. அப்போது அந்த விமானத்தின் வெளிப்புறம் இருந்த எரிபொருள் டேங்க் திடீரென கழன்று ஓடுபாதையில் விழுந்தது. அதில் இருந்து சிதறிய எரிபொருளால் ஓடுபாதையில் சிறிய தீவிபத்தும் ஏற்பட்டது. உடனே அந்த போர் விமானமும், மற்ற விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது மீட்புபடையினர் விரைந்து சென்று ஓடுபாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒருசில விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சில விமானங்கள் புறப்பட தாமதமானது. 2 மணி நேரத்துக்கு பின்னரே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியது.

Related Tags :
Next Story