தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் சாகும் வரை உண்ணாவிரதம்


தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் சாகும் வரை உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 8 Jun 2019 11:09 PM IST (Updated: 8 Jun 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

ஐதராபாத், 

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் முன்னிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தனர்.

இந்த நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சட்டவிரோதமாக இணைத்துக்கொண்டதை கண்டித்து மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை  தொடங்கினார்.

Next Story