கதுவா சிறுமி பாலியல் பலாத்கார, கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கதுவாவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது. சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. விசாரணை நடத்திய போலீசார் ரசானா கிராமத்தின் தலைவன், பூசாரியான சஞ்சி ராம் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் நடைபெற்றது. போலீசார் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பிட்ட சிறுபான்மையினரை அந்த பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சதி திட்டத்துடன் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்த விசாரணை முடிந்தது. இன்று காலை தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரில் ஆறு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கைது செய்யப்பட்டவர்களில் சஞ்சிராம், பர்வேஷ் குமார் மற்றும் தீபக் கஜுரியாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மூவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story