அமித் ஷாவுடன் 5 மாநில ஆளுநர்கள் சந்திப்பு


அமித் ஷாவுடன் 5 மாநில ஆளுநர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 10 Jun 2019 10:44 PM IST (Updated: 10 Jun 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை, 5 மாநில ஆளுநர்கள் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.  உள்துறை மந்திரியாக அமித் ஷா பொறுப்பேற்ற பின்னர் நடத்தப்பட்ட முக்கிய சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.  

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக அமித் ஷா பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே உள்துறை மந்திரியாக இருந்த ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத் துறை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 5 மாநில ஆளுநர்களை உள்துறை மந்திரி அமித் ஷா தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் நரசிம்மன், ஜாக்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்மு, அருணாசல  பிரதேச ஆளுநர் பிடி மிஸ்ரா ஆகியோர் அமித் ஷாவை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  

இந்த சந்திப்பின்போது மாநில பிரச்னைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.


Next Story