நாடாளுமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீண்டும் தாக்கல்
நாடாளுமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதுடெல்லி,
மருத்துவ கல்வியில் ஏராளமான சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, கடந்த 2017-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிலைக்குழு ஆய்வுக்கு பிறகு சில திருத்தங்களும் செய்யப்பட்டன. ஆனால், மக்களவை கலைக்கப்பட்டதால், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.
இந்நிலையில், புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு மசோதா, மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு, மத்திய மந்திரிசபையின் ஒப்புதலையும் பெற்று விட்டு, மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
மருத்துவ கல்வியை ஒழுங்குபடுத்தும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள், இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளன.

Related Tags :
Next Story