மேற்கு வங்காளத்தில் வன்முறையின் போது உடைக்கப்பட்ட வித்யாசாகரின் சிலை மீண்டும் திறப்பு


மேற்கு வங்காளத்தில் வன்முறையின் போது உடைக்கப்பட்ட வித்யாசாகரின் சிலை மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 11 Jun 2019 4:07 PM IST (Updated: 11 Jun 2019 4:07 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் வன்முறையின் போது உடைக்கப்பட்ட வித்யாசாகரின் சிலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கொல்கத்தாவில் பேரணி மேற்கொண்டபோது வன்முறை வெடித்தது. இதில் தத்துவ மேதையும், வங்காள மறுமலர்ச்சிக்கு காரணமானவருமான இஷ்வார் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது.  இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். தேர்தல் முடிந்த பின்னர் உடைக்கப்பட்ட வித்யாசாகரின் சிலை மீண்டும் நிருவப்பட்டுள்ளது. சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி இன்று திறந்துவைத்தார்.

Next Story