உ.பி.யில் மீண்டும் ஆன்டி-ரோமியோ படையை கொண்டுவர யோகி ஆதித்யநாத் உத்தரவு


உ.பி.யில் மீண்டும் ஆன்டி-ரோமியோ படையை கொண்டுவர யோகி ஆதித்யநாத் உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2019 4:35 PM IST (Updated: 11 Jun 2019 4:35 PM IST)
t-max-icont-min-icon

உ.பி.யில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய ஆண்களை தொடர்ச்சியாக கண்காணிக்க போலீசுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் 2017-ல் பொறுப்பு ஏற்ற பின்னர் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதைத் தடுப்பதற்காக ரோமியோ தடுப்புப்படை என்ற பெயரில் காவல்துறை குழுக்களை அமைத்தார். இதன்படி பொது இடங்களில், சாதாரண உடை அணிந்த பெண் காவலர்கள் ரகசியமாக ஊடுருவி கண்காணித்தனர். இதனையடுத்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அப்போது காதலர்களும் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியது. இப்போது மாநிலத்தில் சிறுமி கொடூரமான கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் செய்தி அங்கிருந்து தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் உ.பி.யில் மீண்டும் ஆன்டி ரோமியோ படையை செயல்படுத்த போலீசுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில்  தொடர்புடையவர்களை தொடர்ச்சியாக கண்காணிக்கவும், கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

பெண் போலீசாரை இதுபோன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

Next Story