மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் 2 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் 2 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் தருய்பாரா பகுதியில் கூடியிருந்த மக்கள் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் 3 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பினர். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நடியா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி காலை ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதையும் மீறி இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம் 19–ந் தேதி நாடாளுமன்ற இறுதிகட்ட தேர்தலின்போது, திரிணாமுல் காங்கிரஸ்–பா.ஜனதா இடையே மோதல் வெடித்ததில் 2 பேர் பலியாகினர். 100 பேர் வீடுகளை இழந்தனர். மேற்கு வங்காள மாநிலத்தில் அரசியல் மோதல் தொடர் கதையாக இருந்து வருகிறது.
Related Tags :
Next Story