இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை


இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை
x
தினத்தந்தி 11 Jun 2019 6:09 PM GMT (Updated: 11 Jun 2019 6:09 PM GMT)

இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சில நாடுகளில் இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது. அதில் இ-சிகரெட்களும் புகைப்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த அமைப்பின் ஆய்வுப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இ-சிகரெட்டுகளை இந்தியாவில் தயாரிக்கவும், விற்கவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதோடு அவற்றையும் போதைப்பொருள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Next Story