மோடியுடன் ஒடிசா முதல்-மந்திரி சந்திப்பு: ‘பானி’ புயல் பாதிப்பால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார்


மோடியுடன் ஒடிசா முதல்-மந்திரி சந்திப்பு: ‘பானி’ புயல் பாதிப்பால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார்
x
தினத்தந்தி 11 Jun 2019 10:30 PM GMT (Updated: 11 Jun 2019 9:31 PM GMT)

பிரதமர் மோடியை ஒடிசா முதல்-மந்திரி நேற்று சந்தித்தார். அந்த சந்திப்பில் ‘பானி’ புயல் பாதிப்பால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

அதைத் தொடர்ந்து முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் கடந்த 29-ந்தேதி பதவி ஏற்றார்.

இந்த நிலையில் அவர் தலைநகர் டெல்லிக்கு நேற்று சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், “தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமரை பாராட்டினேன். சமீபத்திய பானி புயலால் பெரும்பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்” என கூறினார்.

Next Story