காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி பலி


காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி பலி
x
தினத்தந்தி 12 Jun 2019 6:29 AM IST (Updated: 12 Jun 2019 6:29 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று அப்பகுதியை சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் பயங்கரவாதிகள் தப்பி செல்லாத வகையில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டது.  இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்றிரவு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

தொடர்ந்து நடந்த இந்த சண்டையில், அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டு உள்ளான்.  அவனது உடல் கைப்பற்றப்பட்டு உள்ளது.  எந்த குழுவுடன் தொடர்புடையவன் என்பது பற்றியும் பயங்கரவாதியை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.

Next Story