காரைக்காலில் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் தேரோட்டம் தொடங்கியது
காரைக்காலில் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் தேரோட்டம் தொடங்கியது.
காரைக்கால்,
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சனி பகவானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து அதிகாலை 5.30 மணியளவில் கோவில் வாசலில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த 5 தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், தியாகராஜர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். திருநள்ளாறு கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story