தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு


தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 AM IST (Updated: 12 Jun 2019 10:45 AM IST)
t-max-icont-min-icon

உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலை சுற்றிப்பாக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்ரா,

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹால் மொகலாய மன்னர் ஷாஜஹானால், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக 17-ம் நூற்றாண்டில் யமுனை ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்டது. 

தாஜ்மஹாலின் அழகை காண நாள்தோறும், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலை சுற்றிப்பாக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி  தாஜ்மஹாலில் 3 மணிநேரம் மட்டுமே சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாஜ்மஹாலை சுற்றிப்பாக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story