ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜனதா, மக்கள் ஜனநாயக கூட்டணி உடைந்த பின்னர் 2018 ஜூன் 20-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுடன் தேர்தல் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கையெழுத்திட்டதும் ஜூலை 3-ம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும். இதனை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி செய்துள்ளார்.
Related Tags :
Next Story