டெல்லி: புழுதிப்புயல் வீசியதால் விமான சேவை நிறுத்தம்


டெல்லி: புழுதிப்புயல் வீசியதால் விமான சேவை நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Jun 2019 11:22 PM IST (Updated: 12 Jun 2019 11:22 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் திடீரென ஏற்பட்ட புழுதிப்புயலால் விமான சேவை நிறுத்தப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று மாலை திடீரென புழுதிப்புயல் வீசியது. இந்த புயல் டெல்லியின் பல்வேறு பகுதிகளை தாக்கியது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த புழுதிப்புயல் டெல்லி விமான நிலையத்தை இன்று மாலை 6.39 மணிக்கு தாக்கியது. 

புழுதிப்புயல் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மாலையில் சுமார் 35 நிமிட நேரம் விமான சேவை  நிறுத்தி வைக்கப்பட்டது. 27 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. பின்னர் இரவு 7.15 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் வழக்கம்போல் விமான சேவை மீண்டும் தொடங்கியது.

Next Story