மக்களவை பா.ஜனதா துணைத்தலைவராக ராஜ்நாத் சிங் நியமனம்


மக்களவை பா.ஜனதா துணைத்தலைவராக ராஜ்நாத் சிங் நியமனம்
x
தினத்தந்தி 13 Jun 2019 12:13 AM IST (Updated: 13 Jun 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

மக்களவை பா.ஜனதா துணைத்தலைவராக ராஜ்நாத் சிங் நியமனம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை பா.ஜனதா துணைத்தலைவராக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக (சபை முன்னவராக) மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் துறை மந்திரி தவர்சந்த் கெல்லாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை பா.ஜனதா துணைத்தலைவராக (சபையின் துணை முன்னவராக) ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று மக்களவை பா.ஜனதா தலைமை கொறடாவாக டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வாலும், மாநிலங்களவை பா.ஜனதா தலைமை கொறடாவாக நாராயண்லால் பஞ்சாரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Next Story