தேசிய செய்திகள்

வாயு புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 86 ரயில்கள் ரத்து + "||" + Cyclone Vayu: 86 trains cancelled, several short terminated

வாயு புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 86 ரயில்கள் ரத்து

வாயு புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 86 ரயில்கள் ரத்து
வாயு புயலின் தாக்கம் இருக்க கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 86 ரயில்களை மேற்கு ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
புதுடெல்லி,

குஜராத்தை தாக்கும் என்று கணிக்கப்பட்ட வாயு புயல்,   திசை மாறி  ஓமனை நோக்கி நகர்ந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆனாலும் குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.

இதனையடுத்து இன்னும் 24 மணி நேரம் முன்னெச்சரிக்கையாக இருக்க அம்மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.  10 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் மாகிம் கடற்கரை பகுதியில் பலத்த மழை மற்றும் காற்று வீசுவதால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில், வாயு புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 86 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 37 ரயில்களின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகளுக்காக சிறப்பு ரயில்களையும் இயக்க மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.  சவுராஷ்டிரா மற்றும் கட்ச் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வலு இழந்த நிலையில் ‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று கரையை கடக்கிறது
வலு இழந்த நிலையில் வாயு புயல், குஜராத்தில் இன்று கரையை கடக்க உள்ளது.