நீட் தேர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


நீட் தேர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x
தினத்தந்தி 13 Jun 2019 11:01 PM IST (Updated: 13 Jun 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு தொடர்பான வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

புதுடெல்லி, 

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

இதற்கிடையே நீட் தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில், நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 4 கேள்விகள் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமையாமல், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் பல மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மாணவர்கள் தரப்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வில், இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

Next Story