சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு : தலைமறைவான சாமியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சி.பி.ஐ. நடவடிக்கை


சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு : தலைமறைவான சாமியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சி.பி.ஐ. நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2019 10:15 PM GMT (Updated: 13 Jun 2019 10:15 PM GMT)

டெல்லியிலும், உத்தரபிரதேசத்திலும் ஆசிரமங்கள் நடத்தி வருபவர் வீரேந்திர தேவ் தீட்சித். இவர் தன்னைத்தானே ‘கடவுள்’ என்று கூறிக் கொள்பவர்.

புதுடெல்லி, 

கடந்த 1999–ம் ஆண்டு, தனது ஆசிரம சிறுமியை அடைத்து வைத்து பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சிறுமி குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது புகார் செய்யப்பட்டது.

டெல்லி ஐகோர்டடு உத்தரவின்பேரில், கடந்த ஆண்டு ஜனவரி 3–ந் தேதி இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. வீரேந்திர தேவ் தீட்சித் தலைமறைவாகி விட்டார். அவர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.ஐ. அறிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் தீட்சித்துக்கு எதிராக நேற்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.


Next Story