வாக்கு சீட்டுகள் மூலம் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்


வாக்கு சீட்டுகள் மூலம் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
x
தினத்தந்தி 14 Jun 2019 4:33 AM IST (Updated: 14 Jun 2019 4:33 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மனோகர்லால் சர்மா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

புதுடெல்லி, 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தலை நடத்த தேர்தல் கமி‌ஷனுக்கு அதிகாரம் இல்லை. வாக்கு சீட்டு மூலம் மட்டுமே தேர்தல் கமி‌ஷனால் தேர்தலை நடத்த முடியும். எனவே வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி புதிதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக விடுமுறைகால அமர்வில் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.


Next Story