தேசிய செய்திகள்

60 வயதானதும் மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும்: ஓய்வூதிய திட்டத்துக்கு விவசாயிகள் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும் - மத்திய அரசு தகவல் + "||" + Farmers have to pay Rs.100 per month for pension scheme - Central Government Information

60 வயதானதும் மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும்: ஓய்வூதிய திட்டத்துக்கு விவசாயிகள் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும் - மத்திய அரசு தகவல்

60 வயதானதும் மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும்: ஓய்வூதிய திட்டத்துக்கு விவசாயிகள் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும் - மத்திய அரசு தகவல்
ஓய்வூதிய திட்டத்துக்கு விவசாயிகள் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும். 60 வயதானதும் அவர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி 2–வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் மந்திரிசபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு தனியாக ஓய்வூதிய திட்டம் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முதல் 3 வருடத்தில் 5 கோடி விவசாயிகளை இந்த திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.10,774.5 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அனைத்து மாநில வேளாண் மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது அவர், அனைத்து மாநிலங்களும் இந்த திட்டத்தை விரைவாக தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்காக 18 முதல் 40 வயதுடைய தகுதியுள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் பட்டியலை சேகரிக்கும் பணிகளை உடனே தொடங்கவும் உத்தரவிட்டார். இந்த திட்டம் பற்றி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பிரதம மந்திரி விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவனம் செயல்படுத்துகிறது. விவசாயிகள் 29 வயதை அடைந்ததில் இருந்து தங்கள் பங்களிப்பாக மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும்.

மத்திய அரசும் அதே பங்கு தொகையை ஓய்வூதிய திட்டத்தில் செலுத்தும். விவசாயிகள் 60 வயதை அடைந்ததும் குறைந்தபட்சமாக மாதந்தோறும் அவர்களுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும்.

விவசாயிகள் இந்த தொகையை (ரூ.100) பிரதமர் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் பெறும் பணத்தில் (ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்) இருந்தும் நேரடியாக செலுத்தலாம்.

இந்த திட்டம் வெளிப்படையாக நடைபெறுவதற்காக ஆன்–லைனில் குறைகளை தீர்ப்பதற்கும் வழிகாணப்படும்.

இந்த தகவலை மத்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பேரையூரில் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் சரிவர வருவதில்லை என கூறி பேரையூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு செய்தனர்.
2. நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்; நாராயணசாமியிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
3. நில அளவை சான்று வழங்க லஞ்சம்: அதிர்ச்சியில், விவசாயி சாவு திருவிடைமருதூர் அருகே பரிதாபம்
திருவிடைமருதூர் அருகே நில அளவை சான்று வழங்க லஞ்சம் கேட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
4. கெங்கவல்லி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை
கெங்கவல்லி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
5. கவுந்தப்பாடி அருகே விவசாய நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; போலீசாருடன் விவசாயிகள் தள்ளுமுள்ளு
கவுந்தப்பாடி அருகே விவசாய நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் விவசாயிகள், போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.