சிசிடிவி கேமராக்கள் உதவியால் மும்பை-புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்ப்பு


சிசிடிவி கேமராக்கள் உதவியால் மும்பை-புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 11:03 AM GMT (Updated: 14 Jun 2019 12:08 PM GMT)

சிசிடி கேமராக்கள் உதவியால் மும்பை மற்றும் புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் புனே மார்க்கத்தில் மலைப்பகுதியில் மழைக்காலங்களில் நேரிடும் பேரிடரை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இப்போது அது பயனுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. மலைப்பகுதியில் தண்டவாளத்தில் பாறாங்கல் ஒன்று விழுந்துள்ளது. லோனாவாலா பகுதியில் இரவு 8:15 மணியளவில் விழுந்துள்ளது. இக்காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. மும்பை - கோல்ஹாபூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அப்பகுதி வழியாக செல்வதற்கு முன்னதாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிசிடிவி கேமரா பதிவை கண்காணித்து வந்த பணியாளர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ரெயில்களை ஆங்காங்கே நிறுத்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மீட்பு பணியை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை - கோல்ஹாபூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாகூர்வாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டது. இடர்பாடுகள் அகற்றப்பட்டதும் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

Next Story