ஜாம்செட்பூர் அருகே மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் உயிரிழப்பு
ஜாம்செட்பூர் அருகே மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் உயிரிழந்தனர்.
மேற்கு வங்காளம் - ஜார்க்கண்ட் மாநில எல்லையில் சாராய்காலா மாவட்டத்தில் போலீசாரை குறிவைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மாலையில் அப்பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 5 போலீசார் உயிரிழந்தனர். போலீசாரிடம் இருந்து ஆயுதங்களையும் தீவிரவாதிகள் பறித்துச் சென்றனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது. இத்தாக்குதலுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ராகுபார் தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீசாரின் உயிர்த்தியாகம் வீண் போகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story