முக்கிய பிரமுகர்கள் பெயரில் போலி ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பணம் பறிப்பு - சிறுவன் பிடிபட்டான்


முக்கிய பிரமுகர்கள் பெயரில் போலி ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பணம் பறிப்பு - சிறுவன் பிடிபட்டான்
x
தினத்தந்தி 15 Jun 2019 12:45 AM IST (Updated: 15 Jun 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

முக்கிய பிரமுகர்கள் பெயர்களில் போலி ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பணம் பறித்த சிறுவன் பிடிபட்டான்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சித்தார்த் ‌ஷா. இவர் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தனது பெயரில் யாரோ போலி ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி, பணத்தையும், பரிசுப்பொருட்களையும் பெற்று வருவதாக அவர் கூறியிருந்தார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், 17 வயது சிறுவன் ஒருவன் இந்த காரியத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்து, அவனை பிடித்துச் சென்றனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவன் ஒடிசா சுகாதார மந்திரி என்.கே.தாஸ் உள்பட நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பெயரில் போலி ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி, ஏராளமானோரிடம் பணமும், பரிசுப்பொருளும் பெற்றுள்ளது தெரிய வந்தது. அவன் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். ஏற்கனவே 2 வழக்குகளில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவன். அதன்பிறகும் இத்தகைய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்துள்ளான்.

Next Story