சத்தீ‌‌ஷ்காரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை


சத்தீ‌‌ஷ்காரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 15 Jun 2019 1:00 AM IST (Updated: 15 Jun 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

சத்தீ‌‌ஷ்காரில் 2 நக்சலைட்டுகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ராய்ப்பூர்,

சத்தீ‌‌ஷ்கார் மாநிலம் கான்கெர் மாவட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நக்சல் ஒழிப்பு படையினர் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு நக்சல் ஒழிப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இதில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

Next Story