நாடு முழுவதும் இஸ்ரேலிய நிறுவனங்கள் மீது தாக்குதலுக்கு வாய்ப்பு - பாதுகாப்பு படையினர் உஷார்
நாடு முழுவதும் இஸ்ரேலிய நிறுவனங்கள் மீது தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் இஸ்ரேலிய தூதரகங்கள், யூத பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டவர் அடிக்கடி வந்து செல்லும் ஓட்டல்கள் என இஸ்ரேல் தொடர்பான நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை கண்டறிந்துள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஐ.எஸ். ஆதரவு அமைப்புகள் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் இது குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்துள்ள பாதுகாப்பு படையினர், மேற்படி நிறுவனங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, தீவிர கண்காணிப்பிலும் இறங்கி உள்ளனர்.

Related Tags :
Next Story