நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற ஒத்துழையுங்கள் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்


நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற ஒத்துழையுங்கள் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Jun 2019 5:06 PM IST (Updated: 16 Jun 2019 5:32 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை 2வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.  இதனையொட்டி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று காலை தொடங்கியது.  

இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 

நாடாளுமன்ற கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். 

அரசியல் வேறுபாடுகளை புறம் தள்ளி தேசத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்க வேண்டும் என்றார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் டெரிக் ஓ’ பிரையன், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story