கடும் வெயில் காரணமாக பீகாரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கடும் வெயில் காரணமாக பீகாரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் வெயில் கொளுத்துகிறது. பாட்னா, கயா, பாகல்பூர் நகரங்களில் நேற்று 115 டிகிரி வெயிலுடன் அனல்காற்று வீசியது. பீகாரில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 70 பேர் வரை பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் 30 பேரும், கயா மாவட்டத்தில் 20 பேரும், நவடா மாவட்டத்தில் 11 பேரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.
வெயிலால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வெயில் காரணமாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார். வெயில் காரணமாக பாட்னா நகரில் கடந்த 9–ந் தேதி முதல் நேற்று வரை அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிற நிலையில், கல்வி நிலையங்களை தொடர்ந்து மூட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளை வரும் 22-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story