நாடாளுமன்றத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளேன் - ராகுல்காந்தி


நாடாளுமன்றத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளேன் - ராகுல்காந்தி
x

நாடாளுமன்றத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

புதுடெல்லி,

வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்  

இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவனாக இருப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக இன்று பணியை தொடங்கினேன் .வயநாடு தொகுதி எம்.பி.யாக இன்று பிற்பகல் பதவியேற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளேன் என கூறி உள்ளார்.

Next Story