காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - ராணுவ அதிகாரி வீர மரணம்


காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - ராணுவ அதிகாரி வீர மரணம்
x
தினத்தந்தி 17 Jun 2019 5:44 PM IST (Updated: 18 Jun 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பிட்ரூ அகிங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கிருந்து பயங்கரவாதிகள் வெளியேற முடியாமல் அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு அவர்களும் திருப்பி சுட்டனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆனாலும் அந்த பகுதியில் மேலும் சிலர் பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் அடைந்த வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் உள்பட 4 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி ராணுவ அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

Next Story