சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த தலைவரை கடத்தி கொலை செய்த நக்சலைட்டுகள்
சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளால் கடத்தி கொல்லப்பட்டார்.
பிஜாப்பூர்,
சமாஜ்வாடி கட்சியை சேர்ந்தவர் சந்தோஷ் புனெம். சாலை ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவர் மரிமல்லா கிராமத்திற்கு சாலை தொடர்புடைய பணியை மேற்பார்வையிட சென்றுள்ளார்.
அவரை நக்சலைட்டுகள் நேற்று மாலை கடத்தி கொண்டு சென்றனர். இந்நிலையில், இன்று காலை அவரது உடல் மரிமல்லா மலை பகுதியருகே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை கண்ட உள்ளூர்வாசிகள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்காக அமைக்கப்பட்ட போலீசார் குழு ஒன்று அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று உடலை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த சத்தீஸ்கார் சட்டசபை தேர்தலில் பிஜாப்பூர் தொகுதியில் இவர் போட்டியிட்டார்.
Related Tags :
Next Story