ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்: குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியதாக ராஜ்நாத் சிங் தகவல்


ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்: குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியதாக ராஜ்நாத் சிங் தகவல்
x
தினத்தந்தி 19 Jun 2019 9:02 PM IST (Updated: 19 Jun 2019 9:02 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்,

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தும் முறையை இடதுசாரி கட்சிகள் எதிர்த்தன. 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 21 கட்சிகளின் பிரநிதிகள் பங்கேற்றனர்.

சில கட்சிகள்  பங்கேற்காவிட்டாலும் தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story