துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று டெல்லி பயணம்


துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று டெல்லி பயணம்
x
தினத்தந்தி 20 Jun 2019 6:58 AM IST (Updated: 20 Jun 2019 6:58 AM IST)
t-max-icont-min-icon

துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று மாலை டெல்லி செல்கிறார்

சென்னை,

முதல்வர் எடப்பாடி  பழனிசாமி சமீபத்தில் டெல்லியில்  நடைபெற்ற நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் தேவைகள் பற்றியும், உடனடியாக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டியதின் அவசியத்தை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்க டெல்லி செல்கிறார். டெல்லி பயணத்தின் போது மற்ற முக்கிய அமைச்சர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story