எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்
நமது எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
புதுடெல்லி,
நேற்று மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* மக்களவைக்கு தேர்வாகியுள்ள புதிய உறுப்பினர்களை நான் மனதார வரவேற்கிறேன்
* மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம் பெற்றிருப்பது பெருமையானது
* இந்த மக்களவைத் தேர்தலில், 61 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் வாக்களித்து புதிய சாதனை படைத்தனர். இந்திய மக்கள் தெளிவான முடிவை வழங்கி உள்ளனர். தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்
* அனைவரும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்ற அடிப்படையில் அரசு செயல்படுகிறது.
* கடந்த 5 ஆண்டுகளில் அரசின் செயல்பாடுகளில் மக்கள் திருப்தி. பாதுகாப்பான இந்தியாவை கட்டமைப்பதில் அரசு உறுதியாக உள்ளது
* வறட்சி பாதித்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சாதி, பேதமற்ற புதிய இந்தியாவை உருவாக்குவதே இலக்கு
* நகரங்களோடு கிராமங்களும் வளர்ச்சி பெற திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் வளர்ச்சி செல்ல வேண்டும் என்பதே இலக்கு
* 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்
* நாட்டில் இருந்து ஏழ்மையை முற்றிலும் அகற்ற அரசு உறுதி பூண்டு உள்ளது
* கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகள், பெண்கள் முன்னேற்றத்தில் அரசு கவனம் செலுத்தியது
* கிராமப்புற பள்ளிகளுக்கு அனைத்து வித வசதிகளும் வழங்கப்பட்டு மேம்படுத்தப்படும்
* விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக அரசு பாடுபடும்
* வேளாண்துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையை மேம்படுத்த அரசு முழு முயற்சி மேற்கொண்டுள்ளது. மருந்து பொருட்கள் மலிவான விலையில் கிடைக்க நடவடிக்கை.
* நாட்டின் 112 'மாவட்டங்களை' அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் பெரிய அளவில் நடந்து வருகின்றன.
* சிறு, குறு வணிக நிறுவனங்களுக்கு என சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேளாண் வளர்ச்சிக்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்
* நமது எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும். அந்த வகையில், ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்
* விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு பெரும் கவலையாக மாறியுள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளை மீட்டெடுக்க சிறப்பு திட்டங்கள் தீட்டப்படும்.
Related Tags :
Next Story