மேற்கு வங்காளத்தில் கொல்லப்பட்ட தொண்டருக்கு சொந்தம் கொண்டாடும் இரு கட்சிகள்


மேற்கு வங்காளத்தில் கொல்லப்பட்ட தொண்டருக்கு சொந்தம் கொண்டாடும் இரு கட்சிகள்
x
தினத்தந்தி 20 Jun 2019 2:52 PM IST (Updated: 20 Jun 2019 2:52 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் கொல்லப்பட்ட தொண்டருக்கு பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் சொந்தம் கொண்டாடுகின்றன.

சிலிகுரி,

மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டத்தின் டுபான்கஞ்ச் நகரில் வெலக்கபோரா பகுதியை சேர்ந்தவர் ஆனந்தா (வயது 30).  இவர் சமீபத்தில் கொல்லப்பட்டு விட்டார்.  இவரை சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க. இளைஞர் அணி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவரை கொன்று விட்டனர் என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ எங்களது கட்சி ஆதரவாளரான அவரை பா.ஜ.க.வினர் கொன்று விட்டனர் என பதிலுக்கு குற்றச்சாட்டு கூறியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளை கைப்பற்றியது.  அங்கு பா.ஜ.க. 18 தொகுதிகளை கைப்பற்றி அக்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தது.  கடந்த 2014 பொது தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

Next Story