பெண்ணின் புடவையில் திடீரென பற்றிய தீ... சிசிடிவி காட்சி வெளியீடு


பெண்ணின் புடவையில் திடீரென பற்றிய தீ... சிசிடிவி காட்சி வெளியீடு
x
தினத்தந்தி 20 Jun 2019 3:43 PM IST (Updated: 20 Jun 2019 3:43 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் கோவிலில் வழிபாடு நடத்திய பெண்ணின் புடவையில் திடீரென தீப்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹூப்ளி,

கர்நாடகாவில் கோவிலில் வழிபாடு நடத்திய பெண்ணின் புடவையில் திடீரென தீப்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் பெண் ஒருவர் சாமிக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக அவரது புடவையில் தீப்பிடித்தது. 

தீயை அணைக்க முயற்சித்த போது அது வேகமாக பரவியதால் அருகில் இருந்தவர்களால் அவரை நெருங்க முடியவில்லை. இதையடுத்து தரையில் உருண்டு தீயை அணைத்தார். இருந்த போதிலும், தீக்காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 


Next Story