தமிழகத்திற்கு குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசு


தமிழகத்திற்கு குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசு
x
தினத்தந்தி 20 Jun 2019 1:57 PM GMT (Updated: 20 Jun 2019 1:57 PM GMT)

போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து கடந்த மார்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க கேரள அரசு முன்வந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு விட்டன. சென்னை  மாநகரில் இரவு பகல் என்று பார்க்காமல் வாகனங்களில் குடும்பத்துடன் குடங்கள், பிளாஸ்டிக் கேன்களை எடுத்து கொண்டு தண்ணீரை தேடி பொதுமக்கள் அலைவதை காணமுடிகிறது. சென்னையில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க முன்வந்ததாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் தேவையுள்ள இடங்களுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரெயில் மூலம் அனுப்ப தமிழக அரசிடம் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் அலுவலகம் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.  இப்போதைக்கு தேவையில்லை என தமிழகம் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story